மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சிம்பு - த்ரிஷாவை வைத்து செல்வராகவன் இயக்க திட்டமிட்டிருந்த புதிய படத்திலிருந்து விலகிவிட்டார் த்ரிஷா. இருவரையும் வைத்து சமீபத்தில் ஃபோட்டோசெஷன் நடத்தினார் செல்வராகவன். கமல் நடிக்கும் படம் மற்றும் சுந்தர்.சி இயக்கும் படத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக்கொண்டதால் அவரது கால்ஷீட் க்ளாஸ் ஆனதாக சிம்பு மற்றும் செல்வராகவன் தரப்பில் சொல்லப்பட்டது. தற்போது த்ரிஷாவுக்கு பதிலாக மெட்ராஸ் படநாயகி கேத்ரின் தெரசாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார். ஆனாலும் த்ரிஷா விலகலுக்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் மறைந்திருப்பதாகத் தோன்றியது.
த்ரிஷாவுக்கு நெருக்கமான தரப்பில் விசாரித்தபோது, செல்வராகவன் படத்திலிருந்து த்ரிஷா விலகியதற்கான உண்மைக் காரணம் தெரிய வந்தது. சிம்பு - செல்வராகவன் இருவரும் தொடர்ந்த தோல்விப்படங்களைக் கொடுத்தவர்கள். எனவே அவர்கள் இணையும் படத்துக்கு இதுவரை தயாரிப்பாளர் கிடைக்கவில்லையாம்!