'ரெட்ரோ' ருக்கு - வாழ்த்தியவர்களுக்கு பூஜா ஹெக்டே நன்றி | லாரன்ஸ் உடன் இணையும் மாதவன், நிவின் பாலி | பிறந்தநாளில் சூர்யா 45 பட அப்டேட் | மோகன்லாலின் மலையாள படப்பிடிப்புக்கு விசிட் அடித்த நெல்சன் : ஜெயிலர் 2விலும் நடிப்பது உறுதி | காந்தாரா படப்பிடிப்பில் ஆற்றில் மூழ்கி துணை நடிகர் உயிரிழப்பு | எளிமையாக நடைபெற்ற ரெமோ வில்லனின் திருமணம் | ரெட்ரோ படப்பிடிப்பில் காயம் அடைந்த சிறுமிக்கு உதவிக்கரம் நீட்டிய மம்முட்டி | கலைஞர்களுக்காகவே உருவாக்கப்பட்ட 'குங்குனாலோ' செயலி | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நடிக்கிறாரா சமந்தா? அவரே வெளியிட்ட தகவல் | பெயரை மாற்ற போகிறாரா தெலுங்கு நடிகர் நானி? |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தூக்கு தண்டனை பற்றியும், இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் பற்றியும் இப்படம் பேசப்பட இருக்கிறது. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் கார்த்திகா ஆகியோர் போராளிகளாக நடித்துள்ளனர்.
பொதுவாக எஸ்.பி.ஜனநாதன் தனது ஒவ்வொரு படங்களிலும் புதியவர் யாரையாவது ஒருவரை அறிமுகம் செய்து வைப்பார். அதன்படி இந்தப்படத்தில் வர்ஷன் என்ற இசையமைப்பாளரை அறிமுகம் செய்து இருக்கிறார். பாடலாசிரியர் அறிவுமதி மூலமாக இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனிடையே இந்தப்படத்தில் தானும் பணியாற்ற வேண்டும் என்று இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ஜனநாதனிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஈ படத்திற்கு இசையமைத்தவர், அந்த நட்பின் பேரில் ஜனநாதனிடம் கேட்டார். ஆனால் ஜனநாதனோ, இந்தப்படத்திற்கு வர்ஷனை இசையமைக்க ஒப்பந்தம் செய்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார். இருந்தாலும் ஸ்ரீகாந்த் தேவா விடாப்பிடியாக உங்களது படத்தின் டீசர் அல்லது டிரைலருக்காவது எனக்கு இசையமைக்க வாய்ப்பு தாருங்கள் என்று கேட்டுள்ளார்.
எஸ்.பி.ஜனநாதனோ அதெல்லாம் வேண்டாம் என் படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலைகளை நீயே பார்த்து கொள் என்று கூறியிருக்கிறார். தனக்கு இப்படியொரு வாய்ப்பா என்று மகிழ்ச்சியுடன் பின்னணி இசை கோர்ப்பு சேர்த்து கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. அதன்படி படத்தின் பின்னணி இசையும் சிறப்பாக வந்துள்ளது என்று ஸ்ரீகாந்த் தேவாவை பாராட்டியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.