பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! |
சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்ததாக தகவல் வந்துள்ள நிலையில், இந்த தகவலை, த்ரிஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு உடன் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். படத்தில் முக்கிய கேரக்டர்களில், டாப்ஸி மற்றும் ஜலபதிபாபு நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, த்ரிஷா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜீனியஸ் இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளதால் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
த்ரிஷா, இதற்கு முன், சிம்பு உடன் அலை மற்றும் கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்திருந்தார்
த்ரிஷா - தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் இடையே சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், த்ரிஷா தொடர்ந்து புதுப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதால், அவர்களது திருமணம் தடைபட்டுள்ளது. இதன்காரணமாக, த்ரிஷா - வருண் மணியன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால், திருமணம் ரத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், த்ரிஷாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.