‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சேது, காசி, பிதாமகன், அந்நியன், ஐ என படத்துக்கு படம் ஒவ்வொரு முகம் காட்டிய விக்ரம், தற்போது விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் லாரி டிரைவராக நடித்துள்ள அவர், பல காட்சிகளில் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். குறிப்பாக, ஐ படத்துக்காக தனது பாடிலாங்குவேஜையே மாற்றி நடித்த விக்ரம், பாடி பில்டராகவும் நடித்து வியப்பினை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் பத்து எண்றதுக்குள்ள படத்தில் இன்னொரு புதுமையான விக்ரமை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாராம். சண்டை, பாடல் காட்சிகளில் அதிக விறுவிறுப்பினை காண்பித்திருக்கிறாராம். இந்த வேகத்தை படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஒரே லெவலில் வெளிப்படுத்தி நடித்திருக்கிறாராம். எங்காவது ஒரு இடத்தில் தேக்கநிலை தென்பட்டால் அதை மீண்டும் நடித்து சரி பண்ணியிருக்கிறாராம். விக்ரமின் இந்த ஈடுபாட்டை பத்து எண்றதுக்குள்ள பட யூனிட்டே பெருமையாக சொல்லி வருகிறது.