‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
உதயநிதி, தான் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள நண்பேன்டா படத்திற்கு வரிவிலக்கு கேட்டு சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். இயக்குநர் ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கியுள்ள படம் நண்பேன்டா. இப்படத்தின் ஹீரோவாக உதயநிதியும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்துள்ளனர். கூடவே சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது, படமும் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் நண்பேன்டா படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. ஆனால் வரிவிலக்கு தர மறுக்கிறார்கள், கேட்டால் படத்தில் ஆபாச காட்சிகளும், வன்முறை காட்சிகளும் இருப்பதாக கூறுகிறார்கள் என்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற கொண்ட நீதிமன்றம், ஒருவார காலத்திற்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.