‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெயம்ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தில் இமான் இசையில் டண்டனக்கா என்ற பாடல் இடம் பெற்றுள்ளது.
அனேகன் படத்தில் டங்காமாரி பாடலை எழுதிய ரோகேஷ் என்ற புதியவர் எழுதி அனிருத் பாடி உள்ள டண்டனக்கா பாடல் செம ஹிட்டாகி உள்ளது.
டண்டனக்கா என்பது டி.ராஜேந்தர் தன்னுடைய படங்களில் சொல்லும் பிரபலமான வசனம். டி.ராஜேந்தரின் பாடல் வரியான டண்டனக்கா என்ற வார்த்தையை வைத்து இந்த பாடலை உருவாக்கியுள்ளதால் டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் டி.ராஜேந்தரை கேலி செய்வது போல் இருப்பதாக ஃபேஸ்புக் டுவிட்டரிலும் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். தன் படத்தின் பாடல் பற்றி இப்படி ஒரு விமர்சனம் எழுந்ததால், டண்டனக்கா பாடலில் டி.ராஜேந்தரை நாங்கள் இழிவுபடுத்தவில்லை. ரோமியோ ஜூலியட் படத்தில் டி.ராஜேந்தர் ரசிகனாக நான் வருகிறேன். அவரின் தன்னம்பிக்கையே எனது கேரக்டராக இருக்கும். எனவேதான் டண்டனக்கா பாடலை படத்தில் இடம் பெற வைத்தேன். அதில் டி.ராஜேந்தரை அவமதிக்கும் வரிகள் இல்லை. அவரை பெருமைப்படுத்துவதாகவே இருக்கும் என்று சமாளித்தார் ஜெயம்ரவி. இந்தநிலையில் டண் டனக்கா பாடலை எதிர்த்து டி.ராஜேந்தர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.