‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஜெயம்ரவியுடன் பூலோகம், அப்பாடக்கர் படங்களில் நடித்த த்ரிஷா, இப்போது லயன், போகி ஆகிய படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தபோதும் திருமணம் தள்ளிப்போகும் என்பது தெரிகிறது. இருப்பினும், இந்த படங்களை வேகவேகமாக முடித்து விட்டு இந்த ஆண்டு இறுதியில் த்ரிஷா திருமணம் செய்து கொள்வார் என்றுதான் கோலிவுட்டில் இத்தனை நாளும் பேசிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் இப்போது இன்னொரு புதிய படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் த்ரிஷா.
அதாவது, இந்தியில் வெளியான ஸ்பெசல் 26 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் நடிகர் தியாகராஜன் அந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளிலும் ரீமேக் செய்கிறார். அப்படத்தின் தமிழ் பதிப்பில் பிரசாந்தும், தெலுங்கில் ரவிதேஜாவும், கன்னடத்தில் புனித்ராஜ்குமாரும் நடிப்பார்கள் என்று தெரிகிறது. ஆனால், இந்த மூன்று ஹீரோக்களுககும ஜோடியாக த்ரிஷாதான் நடிக்கிறாராம்.
ஏற்கனவே தமிழ், தெலுங்கில் த்ரிஷாவின் மார்க்கெட் உச்சத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கன்னடத்திலும அவர் கால்பதித்து விட்டதால், வியாபாரரீதியாக த்ரிஷா ஒர்க்அவுட்டாகி விட்டாராம். அதோடு, ஸ்பெசல் 26 இந்தி படத்தில் அக்சய்குமாருக்கு ஜோடியாக நடித்த காஜல்அகர்வாலை விடவும் படுகவர்ச்சியாக நடிப்பதற்கும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாராம் த்ரிஷா. ஆக, த்ரிஷாவின் அதிரடி தர்பார் திருமணத்திற்கு பிறகும் தொடரும் என்றே தெரிகிறது.