Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அப்பா இயக்கத்தில் நடிக்கிறேன் : ஐஸ்வர்யா அர்ஜுன்

13 மார், 2015 - 13:00 IST
எழுத்தின் அளவு:
Iswarya-Arjun-interview

ஒரு இனிய காலை வேளை ! அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவை சந்தித்தோம்.. “பட்டத்துயானை” படத்தின் மூலம் கதாநாயகியாக பரிவட்டம் கட்டிக்கொண்ட அவரிடம் காணப்பட்ட எளிமை அவருக்கு இன்னு வலிமை சேர்த்தது.


அடுத்த படம் எப்போ? என்று கேள்வியை உதிர்க்கும் முன்னே..


அதற்குத் தான் தயாராகி கொண்டிருக்கிறேன். அப்பாவோட இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன் அதில் கதக் நடனமாடுகிற மாதிரியான வேடம். அதனால் கதக் நடனம் கத்துக்கிட்டு வரேன் ஏற்கனவே நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஆனால் கதக் தெரியாது.


மத்த டைரக்டர்ன்னா பரவா இல்லை அப்பா டைரக்ஷன்.. அவர் உருவாக்கின கேரக்டருக்கு நான் உயிர் கொடுக்கணும் இல்லைன்னா திட்டு விழும்.அதுக்காக கத்துக்கறேன்.




ஒரு இடைவெளி விழுந்து விட்டது மாதிரி தெரியுதே !


இரண்டு ஹிந்தி படம் வந்தது. வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். நல்ல படம் வந்தால் நடிப்போம். இல்லன்னா வேற வேலையில கவனம் செலுத்தலாம்னு பேஷன் டிசைனிங் கத்துகிட்டேன். இப்ப அப்பா இயக்கும் படத்திற்கு நான்தான் காஸ்டியூம் டிசைனர். லண்டன்ல போய் பேஷன் டிசைனிங் படித்தது நல்லதுக்குத் தான்னு தெரிகிறது.


அப்பா இயக்குற படம்னா சில நல்லது கெட்டது இருக்குமே?


அப்பாங்கிறது வீட்ல.. ஷூட்டிங் ஸ்பாட்டுன்னு வந்துட்டா குரு, சிஷ்யை உறவுதான். அவர் சொல்வதை செய்து விட்டு நல்ல பெயர் எடுக்கணும். நல்ல நடிகை என்று எல்லோரும் பாராட்டணும் அது தான் என் லட்சியம்.


அதுவும் அப்பா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் நடிக்கிறேன் ஹீரோ யார் என்று அப்பா விரைவில் அறிவிப்பார். இந்த படத்திற்காக அப்பா ஒர்க் ஷாப் வைத்து எல்லா நடிகர்களுக்கும் பயிற்சி அளித்து படம் எடுக்க போகிறார்.


ஐஸ்வர்யாவின் பேச்சில் நிதானமும், அதே நேரம் தன்னம்பிக்கையும் தெரிகிறது. புலி பதுங்குவது ஒதுங்குவதற்கு இல்லை பாய்வதற்காகத் தான் என்பதை இவர் நிரூபிப்பார் என்று நம்புவோமாக.


Advertisement
யானையை பிரிந்த வருத்தத்தில் நிக்கி கல்ராணி..!யானையை பிரிந்த வருத்தத்தில் நிக்கி ... மீண்டும் விமான பணிப்பெண்ணாக ஹன்சிகா! மீண்டும் விமான பணிப்பெண்ணாக ஹன்சிகா!


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in