‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கங்கனா ரனாவத்துடன் நடிக்க முதலில் தான் பயப்பட்டதாக, நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார். ஷாகித் கபூர், கங்கனா ரனாவத் நடிப்பில் மிஸ்டர். ஷலோ படம் உருவாகி வருகிறது. கங்கனாவுடன் இணைந்து நடிப்பது குறித்து ஷாகித் கபூர் கூறியதாவது, குயின் படத்தில், கங்கனாவின் நடிப்பை பார்த்து பிரமித்துவிட்டேன். அவரின் நடிப்பு, இன்னும் என் கண்களை விட்டு அகலாமல் இருக்கிறது. இவ்வளவு திறமைமிக்க நடிகையுடன் இணைந்து நடிக்கப்போகிறேன் என்று நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், அவ்வளவு திறமையான நடிகையின் தனது நடிப்பு எடுபடாமல் போய்விடுமோ என்று நினைக்கும்போது, பயமாக இருக்கிறது என்று ஷாகித் கபூர் கூறினார். குயின் படத்தில், கங்கனாவின் நடிப்பிற்கு, தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.