ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது |
கோலிவுட்டில் அறிமுகமாகி இப்போது பாலிவுட் வரை சென்ற நடிகை அசின், நடிக்க வருவதற்கு முன்பே கோடீஸ்வரி. கேரளாவில் அவருக்கு நிறைய எஸ்டேட்டுகள் சொந்தமாக உள்ளது. கொச்சி வந்தால் தங்குவதற்கு ரவிபுரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவருக்கு சொந்த வீடு ஒன்று உள்ளது.
இந்த வீட்டிற்கு உள் அலங்காரம் (இண்டீரியர் டெக்கரேஷன்) செய்ய தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அந்த நிறுவனமும் வேலையை செய்து முடித்தது. அதற்கான பில் 10 லட்சம் ரூபாய். உள் அலங்கார பணிகள் திருப்தி இல்லை என்று அந்தப் பணத்தை செலுத்தாமல் இருந்தார் அசின்.
இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி எர்ணாகுளம் கோர்ட்டில் பணத்தை கேட்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம். அசினின் அடுக்குமாடி வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டதோடு வருகிற 14ந் தேதிக்குள் கோர்ட்டில் 10 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.