‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தி்ல் ரஜினி நடித்த லிங்கா திரைப்படம், ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி, உலகெமெங்கும் வெளியானது. இந்தியா மட்டுமல்லாது உலகெமெங்கும் 4000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. ரசிகர்களின் பேராதரவை பெற்ற லிங்கா படத்தை, சென்னையில் உள்ள தியேட்டரில், லதா ரஜினிகாந்த், மகள்களான ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் மருமகன் தனுஷ், உறவினர் அனிருத் என ரஜினி குடும்பத்தினரே, ரசிகர்களோடு, ரசிகர்களாக அமர்ந்து படத்தை பார்த்தனர். இதுகுறித்து, செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியதாவது, டிசம்பர் 12ம் தேதி, எங்களுக்கு சிறந்த நாள். எங்கள் அப்பா ரஜினியின் பிறந்தநாள் மட்டுமல்லாது, அவரை நீண்ட நாள் கழித்து வெள்ளித்திரையில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. லிங்கா படத்திற்கு ரசிகர்கள் அளித்துள்ள உற்சாகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று கூறினார்.