ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் மா.கா.பா.ஆனந்த். தற்போது தனது பெயரை சினிமாவுக்காக மா.கா.பா. என்று சுருக்கி இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் படம் அட்டி. இதில் அவர் கானா பாடகராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடிக்கிறார். மாஜி ஹீரோ ராம்கி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
"இது காமெடி படம். சென்னை வாழ் இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள நக்கல், நையாண்டிகள், அவர்களின் வாழ்வியல் யதார்த்தங்களை சொல்லும் படம். மா.கா.பா. கானா பாடகராக நடிக்கிறார். இதற்காக அவர் பல கானா பாடகர்களை சந்தித்து அவர்களின் மேனரிசம். பாடும் முறை ஆகியவற்றை அறிந்து வந்து நடித்தார், படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. ஒருவருடைய பெயரை மூன்று எழுத்தில் சுருக்கி கூப்பிடுவது சென்னை வழக்கம். அந்த வகையில் ஹீரோவின் பெயர்தான் அட்டி. என்கிறார்" இயக்குனர் விஜயபாஸ்கர்.