‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்காவின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டது. கடைசிநாள் படப்பிடிப்பில் பூசணிக்காய் உடைப்பார்கள். அதன்படி லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்தபோது பூசணிக்காயும் உடைத்துவிட்டனர்.
லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோதே, இடையிடையே எடிட்டிங் வேலைகளை 90 சதவிகிதம் முடித்து விட்டனராம்! பிறகு பாக்கி எடிட்டிங் வேலையை முடித்துள்ளனர்.
எடிட்டிங் முடிந்ததும் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங்கை அவர் பேசி முடித்துள்ளார்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கூடிய விரைவிலேயே இப்படத்திற்கான பின்னணி இசை கோர்ப்பு வேலையை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். எனவே, நேற்று இரவு லிங்கா படத்தை அவர் பார்த்திருக்கிறார்.
இதற்கிடையில், வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருக்கிற படத்தின் இசை வெளியீட்டுக்கான வேலைகளும் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.
இன்னொரு பக்கம் படத்தின் டீஸர், டிரைலர் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அஜித்தின் என்னை அறிந்தால் பட ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் திக்கு முக்காட வைத்துள்ள நிலையில், அந்த பரபரப்பை திசைமாற்றுவதுபோல் ரஜினியின் லிங்கா டீஸர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
ஆக,ட்விட்டர், ஃபேஸ்புக்கில் டிரெண்டில் இருக்கும் லிங்கா இடம் பிடிக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.