35 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீசாகும் சிரஞ்சீவி, ஸ்ரீதேவி படம் | 'ஜனநாயகன்' விஜய் பெயர் 'தளபதி வெற்றி கொண்டான்' ? | அழவில்லை.... எனது கண்களில் பிரச்சனை : சமந்தா விளக்கம் | ரூ.100 கோடியைக் கடந்தது 'ரெட்ரோ' : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | அம்மா ஆனார் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லா | கமல் 237வது படத்திற்கு யார் இசையமைப்பாளர்? | தனுஷூடன் மோதும் வைபவ் | தீபாவளி ரிலீஸ் படங்கள் என்னென்ன? | சிறுவன் ஸ்ரீதேஜ்-ஐ சந்தித்த அல்லு அர்ஜுன் அப்பா | அமெரிக்காவில் 100 சதவீத வரி : இறுதி முடிவு எடுக்கப்படவில்லை எனத் தகவல் |
ஆரம்பம் படத்தில் அஜீத்துடன் நடித்த நயன்தாராவுக்கு அடுத்தடுத்து புதிய படங்கள் புக்கானதைப்போன்று வீரம் படத்தில் நடித்தபோது தமன்னாவும் தனக்கும் புதிய படங்கள் புக்காகும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால், அதையடுத்து, நண்பேன்டா படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. அதோடு, ஆர்யாவுடன் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போவதாக சொன்னார்கள். இன்றுவரை அதுபற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லை.
அதன்காரணமாக இந்தியில் இரண்டு படங்களில் சில ஹீரோயின்களோடு சேர்ந்து நடித்த தமன்னா, இப்போது தெலுங்கை முழுசாக நம்பிக்கொண்டிருக்கிறார். தற்போது பாகுபாலியில் நடித்து வரும் அவர், மகேஷ்பாபுவுடன் நடித்த ஆகடு படம் அதிர்ச்சி தோல்வியை கொடுத்து விட்டபோதும், அவசர கதியில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம்.
அதோடு, இதற்கு முன்பு ஒத்த பாட்டுக்கு ஆட வேண்டும் என்று அழைத்தால், ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் என்று எக்குத்தப்பாக பேசி வந்த தமன்னா, ஸ்ருதிஹாசன் சில படங்களில் ஒரு பாட்டுக்கு நடனமாடியே பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு வருவதால், இனிமேல் எந்த மாதிரியான வாய்ப்புகள் என்றாலும் பயன்படுத்திக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறாராம் தமன்னா. தமன்னாவின் இந்த திடீர் அறிவிப்பு ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.