'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு | மத்திய அமைச்சருக்கே இந்த நிலை என்றால் ? சுரேஷ்கோபி பட சென்சார் சர்ச்சை குறித்து மாநில அமைச்சர் காட்டம் | மீண்டும் துடிப்புடன் படப்பிடிப்புக்கு தயாரான மம்முட்டி | ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் |
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை ஐ படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு அழைத்து வந்திருந்தனர்.
எத்தனையோ பெரிய ஹீரோக்கள் இருக்க, புனித் ராஜ்குமாரை அழைத்ததற்கும் மிகப்பெரிய காரணம் உண்டு.
ராஜ்குமார் காலத்திலிருந்தே கன்னட சினிமா உலகம் அந்த குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது.
ராஜ்குமாரின் ஆதரவு இல்லாமல் கன்னடத்திரையுலகில் யாருமே படம் எடுக்க முடியாது என்று சொல்வார்கள்.
அவரது மறைவுக்குப் பிறகு ராஜ்குமாரின் பிள்ளைகளான புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் கட்டுப்பாட்டுக்குள் கட்டுண்டு கிடக்கிறதாம் கன்னட திரையுலகம்.
கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட நேரடி கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, மற்ற மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களை கர்நாடகாவில் வெளியிடுவதிலும், கன்னடத்தில் டப் செய்யப்பட்ட படங்களை வெளியிடுவதிலும் அங்கே கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இப்படி கட்டுப்பாடு போட்டதே ராஜ்குமாரின் குடும்பத்தினர்தான்.
பல கோடி போட்டு ஐ படத்தைத் தயாரித்த ஆஸ்கார் ரவி, போட்ட பணத்தை விரைந்து எடுக்கும் எண்ணத்தில், கர்நாடகாவில் சுமார் 200 தியேட்டர்களில் ஐ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார். ஆனால் கர்னாடகாவில் உள்ள கட்டுப்பாடு ஆஸ்கார் ரவிக்கு பெரும் தடையாக இருக்கிறது.
இந்த கட்டுப்பாட்டை ரகசியமாக தளர்த்த வேண்டும் என்றும், ஐ படத்தை அங்கே பல தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கணக்குப்போட்டுத்தான் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரை அழைத்து வந்து, ஹாலிவும் நடிகர் அர்னால்ட் அருகில் உட்கார வைத்து பெருமைப்படுத்தினார்.
புனித் ராஜ்குமருக்கு இப்படி ஒரு மரியாதையைச் செய்ததன் மூலம், ஐ படத்தை கர்னாடகாவில் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்துவிடமுடியும் என்று நம்பிக்கொண்டிருக்கிறாராம் ஆஸ்கார் ரவி.