பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இந்தியில் நடித்த எண்டர்டெயின்மென்ட் படத்தையடுத்து தமன்னா நடிப்பில் தெலுங்கில் இன்று வெளியாகும் படம் ஆகடு. மகேஷ்பாபு எண்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்துள்ள இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வந்தார் தமன்னா. அதிலும் 12 ஆயிரம் அடியுள்ள ஒரு பெல்ட்டை இப்படத்தின் விளம்பரத்திற்காக விசாகப்பட்டினம் கடற்கரையில் வெளியிட்டபோது தமன்னாவும் ரசிகர்கள் முன்னிலையில் தோன்றினாராம்.
இதனால் இதற்கு முன்பு தனது படங்களில் நடித்த காஜல்அகர்வால், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் டிமிக்கி கொடுத்ததால் அதிருப்தியில் இருந்து வந்த மகேஷ்பாபு, இப்போது தமன்னா முழு ஒத்துழைப்பு கொடுத்ததையடுத்து அவரைப்பற்றியும் மேடைகளில் பெருமையாக பேசினாராம்.
இதனால், இந்த ஆகடு படம் ஹிட்டாக அமைந்து விட்டால் அடுத்தடுத்து மகேஷ்பாபுவின் அணுக்கிரகம் தனக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்று எதிர்பார்க்கும் தமன்னா, ஆகடு படம் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக ஆந்திராவில் பாகுபாலி படப்பிடிபபில் இருந்தபோது சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தாராம்.