‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்து வருகிறார். படம் தீபாவளியன்று வெளிவருகிறது. அதற்கு முன்னதாக படத்தின் பாடல் வெளியீட்டூ விழா செப்டம்பர் 15ந் தேதி நடக்கிறது. இதில் பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ அர்னால்டு கலந்து கொள்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் சென்ற ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு அங்கு அர்னால்டை சந்தித்து பேசினார். அவருக்கு அர்னால்டு விருந்தளித்து வரவேற்றார். அந்த விருந்தில் ஐ படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படத்தின் சில முக்கிய காட்சிகளை போட்டுக் காட்டினார். அதைப் பார்த்து ஆச்சர்யமடைந்த அர்னால்டு "ஹாலிவுட் படங்களை விட பிரமாதமாக இருக்கிறதே இந்தியா ஒரு ஏழை நாடு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு இப்படியெல்லாம் படம் எடுக்கிறீர்களா?" என்று கேட்டிருக்கிறார்.
அதோடு விக்ரம் 120 கிலோ எடை ஏற்றியதையும் அதை 50 கிலோவாக குறைத்த பயற்சி வீடியோவையும் போட்டு காட்டியிருக்கிறார். "தொழில்முறை பாடி பில்டரான என்னால்கூட இதனை செய்ய முடியாது நான் உடனே அவரை பார்க்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் செப்படம்பர் 15 விழாவுக்கு அவரை அழைத்துவிட்டு திரும்பினார் ரமேஷ் பாபு. விழா நடக்கும் இடம் மட்டும் முடிவாகவில்லை. பிரமாண்ட அரங்கம் அமைத்து இந்தியாவில் உள்ள அனைத்து சூப்பர் ஸ்டார்களையும் அழைத்து பிரமாண்டமாக ஆடியோ விழாவை நடத்த இருக்கிறார்கள்.