ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சூர்யா நடிக்கும் படம் என்றாலே பலரும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் நிலை இருந்து வந்தது. அதை 'அஞ்சான்' படம் முறியடித்து விட்டதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். சூர்யா நடிக்கும் படங்களில் நடிக்கும் நாயகியர் அதிக கிளாமராக நடிக்காமல், கொஞ்சம் குடும்பப் பாங்கான தோற்றத்துடனேயே இருப்பார்கள். ஆனால், 'அஞ்சான்' படத்தில் சூர்யா ஜோடியாக நடித்திருக்கும் சமந்தாவின் கிளாமரான, கவர்ச்சியான நடிப்பு குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
படத்தில் பல காட்சிகளில் சூர்யாவுக்கு கிடைக்கும் கைதட்டலை விட, சமந்தா வரும் காட்சிகளில் கைதட்டல்கள் ஒலிக்கிறதாம். இதனால், குடும்பத்துடனும், தங்களது பிள்ளைகளுடனும் சென்று படம் பார்ப்பவர்கள் தியேட்டர்களில் நெளிகிறார்களாம். இது நாள் வரை சூர்யா படங்களுக்கென்று இருந்த மரியாதையை இந்தப் படம் கெடுத்துவிட்டதாகவே அவர்கள் கருதுகிறார்கள்.
அதிலும் ஒரு பாடல் காட்சியில் சூர்யாவும், சமந்தாவும் ஆடிப்பாடுவது கவர்ச்சியின் உச்சமாகவே இருக்கிறது என்றெல்லாம் படத்தைப் பற்றிய கமெண்ட்கள் வருகின்றன. சூர்யா திடீரென இப்படி ஆக்ஷன் படத்தில் நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கும் பிடிக்கவில்லை என்றே சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக கிண்டலடித்து கமெண்ட்கள் போடப்பட்டு வருகின்றன. தம்பிக்கு 'அழகுராஜா', அண்ணணுக்கு 'அஞ்சான்' எனவும், “டீஸருக்கு வெற்றி விழா கொண்டாடும் போதே தெரியும், நீங்க பெருசா பல்பு வாங்குவீங்கன்னு” என புகைப்படங்களுடனும் பல கமெண்ட்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.