‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் வாரஇதழ் ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்தி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று கருத்து கணிப்பு முடிவை வெளியிட்டது. அது அஜீத் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இணைய தளங்களில் அஜீத் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் கடுமையாக மோதிக் கொண்டிருந்தார்கள். அஜீத்தை தாக்கி விஜய் ரசிகர்களும், விஜய்யை தாக்கி அஜீத் ரசிகர்களும் வீடியோ கேம் வெளியிடும் அளவிற்கு நிலைமை முற்றியிருக்கிறது.
இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தனது டுவிட்டரில் "அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் தகுதியானவர் என்றால் எனது மனசாட்சிப்படி அஜீத்துக்குத்தான் அதை அடையும் சாத்தியம் உள்ளது" என்று கூறியுள்ளார்.
இது எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றிய கதையாகிப்போய்விட்டது. கொஞ்சம் அமுங்கிக்கிடந்த இந்த பிரச்சினை மீண்டும் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. இதில் தொடர்புடைய விஜய், அஜீத் இருவருமே தங்களின் அடுத்த படங்களில் பிசியாக இருக்கிறார்கள். தினமும் போன் பண்ணி இருவரும் அன்றைய ஷூட்டிங் எப்படி நடந்தது. அடுத்த படம் என்ன? என்பது பற்றி ஜாலியாக, பிரண்ட்லியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.