ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். தெலுங்கைப்பொறுத்தவரை, அங்குள்ள முக்கிய ஹீரோக்களான மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்றவர்களுடன் அதிக படங்களில் நடித்திருக்கிறார். அப்படி நடிக்கிற படங்களில் இன்னொரு ஹீரோயினும் இருக்கிற பட்சத்தில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி அந்த இனனொரு நடிகையை ஓரங்கட்டிவிடுகிறார் ஸ்ருதிஹாசன்.
இதனால் ஸ்ருதிஹாசன் இருக்கிற படங்களில் நடிக்க அங்குள்ள முன்னணி நடிகைகளே நடுங்கிப்போயிருக்கிறார்கள். மேலும், எவடு படத்தில் மகேஷ்பாபவுடன் நடித்திருந்தார் ஸ்ருதி. படுகவர்ச்சியாக அவர் நடித்த போட்டோக்கள்கூட இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கின. ஆனபோதும், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் தமன்னா நாயகியாக நடிக்கிறாராம்.
ஆனால் அந்த வாய்ப்பு தனக்குத்தான் வரும் என்று எதிர்பார்த்திருந்த ஸ்ருதி இப்போது அந்த வாய்ப்பு கைநழுவி விட்டது என்றபோதும அந்த படத்தில் ஒரு அயிட்டம் பாடலுக்கு தான் குத்தாட்டம் ஆடுவதாக கூறியிருக்கிறாராம். இதனால் அப்படநாயகி தமன்னாவுக்குகூட மனதளவில் பீதி ஏற்பட்டிருக்கிறதாம்.
இதற்கு காரணம், மகேஷ்பாபு இதற்கு முன்பு நடித்த பிசினஸ்மேன் படத்தில் ஸ்வேதா பரத்வாஜ், துகுடு படத்தில் பார்வதி மில்டன் ஆகிய நடிகைகள் அயிட்டம் பாடல்களுக்கு ஆடியிருந்தனர். அவர்கள் போட்ட அதிரடி ஆட்டம் காரணமாக அந்த படங்களில் கதாநாயகிகளுக்கே கிடைக்காத மொத்த பெயரையும் அவர்கள் தட்டிச்சென்று விட்டனர். அதனால். இந்த படத்திலும் தனது எதிரி நடிகையான ஸ்ருதிஹாசன் ஒரே பாடலில் தன்னை ஓரங்கட்டிவிடுவாரோ என்று பீதியில் இருக்கிறாராம் தமன்னா.