‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சின்னத்தாய் படத்தில் அறிமுகமானவர் விக்னேஷ். அதையடுத்து, பாலுமகேந்திரா, பாரதிராஜா என முன்னணி டைரக்டர்களின் படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது மார்க்கெட்டில் ஏற்பட்ட திடீர் சறுக்கல் காரணமாக, சமீபகாலமாக பின்தங்கியிருக்கிறார் விக்னேஷ். இருப்பினும், அவ்வப்போது ஏதாவது படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார்.
அந்த வகையில், ஆச்சார்யா, குடியரசு, ஈசா, புவனக்காடு போன்ற படங்களை அவர் அதிகமாக எதிர்பார்த்தார். அதோடு, உடலை வருத்திக்கொண்டும் நடித்திருந்தார். ஆனபோதும் அந்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனால் இப்போது ஒரு படத்தை தானே தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார் விக்னேஷ்.
கார்த்திக்ராஜா இசையமைக்கும் அப்படத்துக்கு முதலில் பனிமூட்டம் என்று பெயர் வைத்திருந்தனர். அந்த தலைப்பு சரியில்லை என்று கார்த்திக் ராஜா சொன்னதால் பின்னர், மாற்றம் என்று வைத்தனர். ஆனால் அதை பதிவு செய்யச்சென்றபோது மாறாதது என்ற பெயரில் ஒரு பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததாம். அதனால், இந்த தலைப்பை வைத்தால், துப்பாக்கி, கள்ளத்துப்பாக்கி போன்று பிரச்னை ஏற்படும். அதனால் தலைப்பை மாற்றி விடுங்கள் என்றார்களாம்.
அதனால், தற்போது மாற்றத்தை மாற்றி விட்டு 'அவன் அவள்' என்று டைட்டில் வைத்துள்ளனர். இந்த தலைப்பாவது மாறாமல் இருக்குமா? என்று அவர்களைக்கேட்டால், இந்த அவன் அவள் தலைப்பு சேம்பரில் பதிவு செய்யப்பட்டு உறுதியாகி விட்டது என்கிறார்கள்.