‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அஜித் பேசியதை பெரிய இஷ்யூவாக்கி பேட்டி கொடுத்து, பரபரப்பு கிளப்பி, பப்ளிசிட்டி தேடி வரும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், பெரிய பப்ளிசிட்டி பிரியர் என்பதுடன், ஜொள்ளு பேர்வழியும் கூட!
இன்று, ஈழத்தமிழர், தமிழச்சி, கற்பு, காப்பு... என பேசி வரும் இவர், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் சண்டை பயிற்சி பெற வந்த அனாமிகா எனும் நடிகையிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதும், அந்த நடிகை இவர் மீது பாலியல் புகார் கூறி, போலீஸ், கோர்ட் என இவரை சந்திக்கு இழுத்ததையும் யாரும் மறந்திருக்க முடியாது. அதன் பிறகு அந்த அனாமிகாவை பீல்ட்-அவுட் செய்ததில் ஜாக்குவாருக்கு பெரும் பங்கு உண்டு.
அஜித், பிரசாந்த் உள்ளிட்டவர்களின் படங்களில் ஆரம்ப காலங்களில் பணிபுரிந்து அவர்களிடம் பைட் மாஸ்டர் என பந்தா காட்டி அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற முடியாமல் போன வருத்தத்தில் தற்போது அஜித்தை பழி தீர்த்துக் கொள்ளப் பார்க்கும் ஜாக்குவாரின் டங்குவார், அறுந்து போவது நிச்சயம் என்கிறது விவரமறிந்த கோடம்பாக்கம். அஜித் ஒன்றும் அனாமிகா இல்லை என்பதை உணர்வது அவசியம்!