‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வல்லவன் படம் வந்த நேரத்தில் நயன்தாராவின் மன்மதனாக திகழ்ந்தவர் சிம்பு. ஆனால் இப்போது ஹன்சிகாவின் மன்மதனாகியிருக்கிறார். இந்த நிலையில், மீண்டும் தனது மாஜி காதலியான நயன்தாராவுடன் இது நம்ம ஆளு படத்துக்காக தற்போது டூயட் பாடிக்கொண்டிருக்கிறார் சிம்பு. இதனால் ஹன்சிகா ஏக கோபத்தில் இருப்பதாக ஏராளமான செய்திகள் தினம் தினம் வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஆனால், சிம்புவோ, ஹன்சிகாவோ இந்த விசயத்தில் நோ ரியாக்சன். இதை பெருசுப்படுத்தாமல், சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு. அதனால் சிம்பு-நயன்தாராவுக்கிடையே மீண்டும் காதல் துளிர்விட்டதாக யார் கதைகட்டி விட்டாலும் அதை நம்பி ஏமாற தயாராகயில்லை என்று இருவருமே எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது போல், காதலித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
மேலும், நாங்கள் நன்றாக புரிந்து கொண்டுதான் காதலித்து வருகிறோம். அதுவும் எங்கள் காதல் கண்டதும் காதல் அல்ல. பார்த்து பழகி, ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகு ஏற்பட்ட ஆழமான காதலாகும் என்று வதந்திகளுக்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இந்த நிலையில், அவ்வப்போது சிம்புவுடன் காதல் உரையாடல் நடத்தி வரும் ஹன்சிகா, நேற்று சிம்புவுக்கு பிறந்த நாள் என்பதால், நேற்றுமுன்தினம் இரவு 12 மணிக்கு முன்அறிவிப்பு இன்றி சிம்பு வீட்டு ஹாலிங் பெல்லை அடித்து என்ட்ரி கொடுத்திருக்கிறார். நட்ட நடு ராத்திரியில் கையில் பொக்கை மற்றும் கேக் பாக்சோடு ஹன்சிகாவை கண்டதும் இன்ப அதிர்ச்சியடைந்ததாம் சிம்பு குடும்பம்.
அதையடுத்து சிம்புவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை அள்ளிக்கொடுத்த ஹன்சிகா, உடனே சிம்புவை கேக் வெட்ட வைத்துள்ளார். அதையடுத்து முதல் பீஸை அவர் ஹன்சிகாவுக்கு ஊட்ட, இவரும் ஒரு பீஸை எடுத்து சிம்புக்கு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார். இதையடுத்து, இந்த ஆண்டு எனக்கு முதல் பிறந்த நாள் வாழ்த்து ஹன்சிகாவின் வாயிலிருந்து கிடைத்திருப்பதால், இது எனக்கு ஸ்வீட்டான வருடமாக அமையப்போகிறது என்று பூரித்துப்போயிருக்கிறாராம் சிம்பு.