‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேரளாவில் இருந்து வரும் நடிகைகள் கணுக்கால் கவர்ச்சியைகூட காட்டமாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் வட இந்தியாவில் இருந்து கோடம்பாக்கத்துக்கள் என்ட்ரியாகும் புதுமுக நடிகைகளோ, டூ-பீஸ் காஸ்டியூமில் சுற்றிக்கொண்டு திரிகிறார்கள். அதில் சஞ்சனாசிங் குறிப்பிடத்தக்கவர்.
ரகளபுரம் படத்தில் கருணாசுடன் உதட்டு முத்தக்காட்சியல் நடிக்க பல நடிகைகள் தயங்கி நின்ற நிலையில், தாராளமாக நடிக்கிறேன் என்று முன்வந்தார் சஞ்சனாசிங். அதோடு தாராள கவர்ச்சிக்கு உத்தரவாதம் கொடுத்து நடித்தார். அதையடுத்து சஞ்சனாவுக்கு பல படங்கள் புக்காகியுள்ளன. இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போன்ற மேல்தட்டு நடிகர்களின் படங்கள் இன்னும் சஞ்சனா பக்கம் திரும்பவில்லை.
அதனால், கேட்கிற விதமாய் கேட்டால்தான் மெகா படங்கள் தன் பக்கம் திரும்பும் என்பதால் இப்போது டூ-பீஸ் போன்ற உடையணிந்து கோடம்பாக்கத்திலுள்ள முன்னணி பட நிறுவனங்களுக்கு ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் சஞ்சனாசிங், சினிமா விழாக்களுக்கும் அதேபோன்ற உடையணிந்தே வருகிறார். ஆனால், அப்படியே வெளியே போனால் நன்றாக இருக்காது என்று அதற்கு மேல் ஒரு மெல்லிய உடையை அணிந்தபடி வருகிறார். ஆனபோதும், உள்ளே அணிந்திருக்கும் டூ-பீஸ் போன்ற உடை அப்பட்டமாக வெளியில் தெரிகிறது.
இதைப்பார்த்து, ஒரு காலத்தில் நமீதாவை குட்டைப்பாவாடை நடிகை என்று சொன்னவர்கள், இவர் அவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார் போலிருக்கே என்று அவரை ஏற இறங்கப்பார்த்து, ஏக்கப்பெருமூச்சு விட்டபடி நிற்கிறார்கள்.