‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீனாள். அதன் பிறகு 30க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர நடிகையாகவே நடித்தார். பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் கிராமத்து பாலியல் தொழிலாளியாக படு கவர்ச்சியாக நடித்தார். அம்மாவின் கைபேசி படத்தில் தங்கர் பச்சான் ஜோடியாக நடித்து அவருடன் ஆட்டம் போட்டார்.
இப்போது அதையும் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டார். தனுஷ் 5ம் வகுப்பு என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருக்கிறார். இறக்கி கட்டிய சேலையில் அவர் ஆடியிருக்கும் ஒரு ஆட்டத்தை மட்டுமே காட்டி படத்துக்கு பிசினஸ் பேசி வருகிறார்கள். கதாக. திருமாவளவன் இயக்கி உள்ள படம்.