'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இழு இழுவென இழுத்து, ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஆயிரத்தில் ஒருவன் படம் ஒருவழியாக பொங்கல் தினத்தில் ரீலிஸ் ஆனது. படம் வெளியான நாளில் இருந்தே கடுமையான பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் படக்குழுவினர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டைரக்டர் செல்வராகவனிடம் நிருபர்கள் சரமாரி கேள்விகளை எழுப்பினார்கள். வரலாற்று கதையை சிதைத்து வீட்டீர்களே என்றும், ஆங்கில பட உல்டாவாக இருக்கிறதே என்றும், ஆயிரத்தில் ஒருவன் யார்? என்றும் பல கேள்விகளை கேட்டனர். ஆரம்பத்தில் ரொம்ப கூலாக பதில் சொன்ன செல்வராகவன், ஒரு நிருபர் ஆயிரத்தில் ஒருவன் ஆங்கில படம் போல எடுத்திருக்கிறோம் என்று சொல்கிறீர்களே? பேசாமல் அந்த ஆங்கில படத்தையே டப்பிங் செய்திருக்கலாம்... என்று கூறியதால் ரொம்பவே டென்ஷன் ஆனார் செல்வா. தமிழ் சினிமாவில் இருப்பவர்களுக்கு மூளை இல்லையா என்ன?. ஆயிரத்தில் ஒருவனைப் போல ஒரு ஆங்கில படத்தை காட்டுங்கள். இந்த பீல்டை விட்டே போய் விடுகிறேன். நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்கிறேன். ஏதாவது ஒரு வேலை பார்த்து பிழைத்துக் கொள்கிறேன், என்று கோபத்துடன் கூறினார். கடைசியில் ஆயிரத்தில் ஒருவன் யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த செல்வராகவன், படத்தின் க்ளைமாக்ஸில் கார்த்தியுடன் வரும் ஒரு குழந்தைதான் ஆயிரத்தில் ஒருவன் என்றார். கடைசியில் டென்ஷனை குறைத்துக் கொண்டு, எனது அடுத்த படத்தில் நீங்களெல்லாம் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திக் கொள்கிறேன் என்றும் கூறி விடை பெற்றார்.