‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், சண்டை பயிற்சியாளர்கள் போன்று நம்மூர் இசையமைப்பாளர்களுக்கும் நடிக்கும் ஆசை தற்போது தலை தூக்கி வருகிறது. ஸ்ரீகாந்த தேவா, இமான், யுவன் சங்கர் ராஜா, விஜய் ஆன்டனி, தஷி என இன்னும் பல இசையமைப்பாளர்களை சமீபமாக தாங்கள் இசையமைக்கும் படங்களில் ஒரு சின்ன வேடத்திலோ, ஒரு முழு பாடல் காட்சியிலோ தொடர்ந்து முகம் காட்டுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்!
இயக்குநர் பேரரசுக்கு இசையமைக்கும் ஆசை வந்து அவர் ஒரு படத்திற்கு இசையமைக்கும் போது எங்களுக்கு நடிக்கும் ஆசை வந்ததில் தவறென்ன இருக்கு? எனக் கேட்கிறார்கள் இவர்கள் ! நியாயம்தான், ஆனால் அதற்கு இயக்கும் ஆசையல்லவா வர வேண்டும் இவர்களுக்கு?!
இயக்குநர் மிஷ்கின், "சித்திரம் பேசுதடி', "அஞ்சாதே' படங்களை அடுத்து "நந்தலாலா' படத்தை இயக்கி வரும் மிஷ்கின் ஒரு பெரும் புத்தக புழுவாம்! ச
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ரூபாய்க்கு புத்தகங்களை வாங்கி கொண்டு போனாராம் இந்த இயக்குநர்! அட !!