சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” |
காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் அடுத்து திருவள்ளுவர் வாழ்க்கையை திருக்குறள் என்ற பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், மோகமுள், பாரதி, பெரியார் படங்களை எடுத்த இயக்குனர் ஞானராஜசேகரன் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், ‛‛தமிழை விட மலையாளத்தில் நல்ல படங்கள் அதிகம் வருகிறது. மலையாள ரசிகர்கள் ரசனை வேறு என்கிறார்கள். நான் கேரளத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவர்களை விட தமிழக ரசிகர்கள் ரசனை சிறந்ததுதான். இல்லாவிட்டால் நான் 6 நல்ல படங்களை எடுத்திருக்க முடியாது. படங்களை ரசிகர்களை கொண்டு போய் சேர்ப்பதில் சில பிரச்னைகள் இருக்கிறது. தியேட்டர் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. மற்றபடி நல்ல படங்கள் தமிழில் அதிகம் வருகிறது, டூரிஸ்ட் பேமிலி கூட அப்படிதான் வந்தது'' என்றார்.
இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‛‛நான் படத்தை முடித்துவிட்டு இளையராஜாவிடம் போனேன். அவர் எதுவும் பேசாமல் இந்த படத்துக்கு சிறந்த இசையை கொடுத்தார். திருவள்ளுவராக கலைசோழனும், வாசுகியாக தனலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸ்'' என்றார்.