Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவாகரத்து கேட்டு தனுஷ் - ஐஸ்வர்யா குடும்பநல நீதிமன்றத்தில் மனு

08 ஏப், 2024 - 13:43 IST
எழுத்தின் அளவு:
Dhanush---Aishwarya-filed-divorce-petition-in-family-court

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தமிழை தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் வரை நடித்து விட்டார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் இவர் திருமணம் செய்து கொண்டார். ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, கடந்த 2022ல் தாங்கள் பிரிவதாக தனுஷ், ஐஸ்வர்யா அறிவித்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை ஐகோர்ட்டில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

எப்படியும் இருவரும் சேர்ந்து வாழ்வர் என இரு குடும்பத்தாரும் எதிர்பார்த்த நிலையில் இவர்களின் இந்த முடிவு குடும்பத்தினர் மற்றும் அவர்களது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் என்பது சினிமா ரிலீஸ் இல்லை : சித்தார்த் கோபம்திருமணம் என்பது சினிமா ரிலீஸ் இல்லை : ... கனவு அலுவலகம் திறந்தார் நயன்தாரா கனவு அலுவலகம் திறந்தார் நயன்தாரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

vijay - coimbatore,இந்தியா
12 ஏப், 2024 - 10:50 Report Abuse
vijay அப்பாடி....இனி நல்லது நடக்கலாம். ரசிகர்களுக்கு கவலை வேண்டாம். அவங்கவங்க பிரச்சினை அவங்களுக்கு. நீங்க சினிமா பார்த்தமா அப்புறம் உங்க வேலையை பார்த்தமா அப்படின்னு இருங்க.
Rate this:
panneer selvam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08 ஏப், 2024 - 18:26 Report Abuse
panneer selvam They are matured adults and know what is good for them .Let them have privacy on this hard subject .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in