ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் |
கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்து வரவேற்பை பெற்ற படம் 'கைதி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடந்த சில வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், மாஸ்டர், விக்ரம், லியோ என லோகேஷ் தொடர்ந்து பிஸியாக படங்களை இயக்கி வந்தார். அதேப்போல் கார்த்தியும் அடுத்தடுத்து தனது படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் கைதி 2 தாமதமாகி வருகிறது.
நேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை முன்னிட்டு கர்நாடகாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரது படம் ஒன்றைக் தயாரிப்பதாக மறைமுகமாக பதிவிட்டிருந்தனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது ராம் சரண் அல்லது ஜூனியர் என்டிஆர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின் படி, கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் 'கைதி 2' தான் என்கிறார்கள். கைதி முதல் பாகத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இரண்டாம் பாகத்தை இந்த நிறுவனம் தயாரிக்கிறதா, இல்லையா என்பது இனி தான் தெரிய வரும். ஒருவேளை கே.வி.என் நிறுவனத்துடன் இணைந்து கூட கைதி 2 படத்தை டிரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கலாம்.