கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் |
கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் 'வாரணம் ஆயிரம்'. இதில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அப்போது இந்தபடம் சூப்பர் ஹிட்டானது.
சமீபத்தில் இப்படம் தமிழ் பதிப்பில் தமிழ்நாட்டில் ரீ ரிலீஸ் ஆனது. கூடுதலாக, கர்நாடகா மாநிலத்தில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்தனர். இப்போது வரை கர்நாடகா மாநிலத்தில் மட்டும் ரூ. 75 லட்சம் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் அறிவித்துள்ளார்.