தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் | மே.29ல் வெளியாகும் ‛மழை பிடிக்காத மனிதன்' பட டீசர் | ஆகஸ்ட்டில் துவங்கும் ஜூனியர் என்.டி.ஆர் - பிரசாந்த் நீல் படப்பிடிப்பு | கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் | இயக்குனரே பொறுப்பேற்பு |
உறியடி படத்தின் மூலம் இயக்குனர், நடிகர் ஆக அறிமுகமானார் விஜயகுமார். இதையடுத்து அவர் நடித்த உறியடி 2, பைட் கிளப் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதளவில் வெற்றியடையவில்லை. இதைத்தொடர்ந்து சேத்துமான் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் தற்போது புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜயகுமார். ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கின்றார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார். அதன்படி படத்திற்கு ‛எலெக்ஷன்' என தலைப்பு வைத்து முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பட தலைப்பை பார்க்கையில் இது அரசியல் தொடர்பான கதைக்களமாக இருக்கலாம் என தெரிகிறது.