கல்கி 2898 ஏடி - ரோபோவுக்கு டப்பிங் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி | திருவண்ணாமலை கோயிலில் நடிகை ரோஜா வழிபாடு | இனி, மாதம் ஒரு பெரிய படம் ரிலீஸ் உறுதி… | வெற்றிக் கோட்டைத் தொடுவாரா 'பி.டி. சார்' | சூரி பட விழாவிற்கு வரும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் | இயக்குனரே பொறுப்பேற்பு | தமிழ் ரசிகர்களைக் கவரும் மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | கல்வி விழா : விஜய்யின் இரண்டு புதிய திட்டம் | புஷ்பா 2 பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட மீனா |
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு எந்த புதிய படங்களிலும் நடிக்கவில்லை. மயோசிடிஸ் நோய்க்கான சிகிச்சையில் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். உடல்நலம் பெற்றதும் விரைவில் தமிழ், தெலுங்கில் புதிய படங்களில் கமிட்டாகி நடிப்பார் என்று கூறப்படுகிறது. வெளிநாடு மற்றும் வெளிஇடங்களுக்கு செல்லும்போது தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் சமந்தா. தற்போது தான் குதிரை சவாரி பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதனுடன் ‛சூரிய அஸ்தமனம் மற்றும் குணப்படுத்துதல்' என குறிப்பிட்டுள்ளார்.