Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நம்மை நாமே அழகாக்குவோம் - அழகிய லைலாவின் அழகு டிப்ஸ்

19 நவ, 2023 - 12:38 IST
எழுத்தின் அளவு:
Lets-make-ourselves-beautiful---beauty-tips-from-the-beautiful-Laila

கன்னக்குழி சிரிப்பில், கொஞ்சும் அழகில் தமிழ் ரசிகர்களை கொஞ்சகாலம் கட்டிப் போட்டிருந்தவர் லைலா. திருமணமாகி குடும்பத் தலைவியாய் வாழ்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்கு
அளித்த பேட்டி...

* ரொம்ப வருஷத்துக்கு பிறகு சர்தார் படத்தில் மீண்டும் நடிக்க வந்தீங்க. இப்போது உள்ள டெக்னாலஜியில் முன்னேற்றம் எந்த அளவு உள்ளது?
ரொம்ப வித்தியாசம் இருக்கு. தயாரிப்பு செலவு அதிகம் ஆகிவிட்டது. நாங்க வந்த புதிதில் தொடர் ஷூட்டிங்கில் கேமரா சூட்டில் தலைமுடி எரிந்து அந்த இடமே கலவரம் ஆகும். எனக்கு பல முறை நடந்திருக்கு. இப்போது பெரிய லென்ஸ், ட்ரோன் என கேமரா வேற லெவல் மாற்றம். சினிமாவில் ஒவ்வொரு துறையும் முன்னேறி இருக்கு.

* நீங்க நடிச்ச படங்களில் மறக்க முடியாத சம்பவம்..?
'பிதாமகன்' படத்தை சொல்வேன். ரயிலில் எடுத்த காட்சியை இப்பவும் நினைச்சு சிரிப்பேன். தேனி பக்கம் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன். அங்கேயே சாப்பிடணும். ரெஸ்ட் எடுக்கணும். சூர்யா ரயிலில் விற்பனை செய்யும் காட்சி எடுக்கும் போது சிரிச்சிட்டே இருப்பேன். படத்தில் நடிக்க பெண் போலீஸ் தேவைப்பட்டது. எனது மேக்கப் பெண்ணை பாலா நடிக்க வைத்தார். அவர் புடவை, சுரிதார் மட்டுமே அணிவார். போலீஸ் டிரஸ் போட மறுத்தார். பாலா தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார்.

* இயக்குனர் பாலா என்றால் பேச ஹீரோக்கள் பயப்படுவார்கள். நீங்கள் எப்படி?
அவர் எனக்கு பயப்படுவார். நான் எது கேட்டாலும் அமைதி ஆகிடுவார். நான் தொண தொண என பேசுவேன். கண்டுக்க மாட்டார்.

* சூர்யாவுடன் நடித்த அனுபவம்?
நல்ல நடிகர். நந்தா அவருடன் என் முதல் படம். ஜோதிகா வீடும் என் வீடும் மும்பையில் பக்கத்திலே இருப்பதால் எங்களுக்கு வேற லெவல் நட்பு இருக்கு.

* முன்பு 'உன்னை நினைத்து' படத்தில் விஜய் கூட நடிக்க வேண்டிய நீங்கள், 2023ல் விஜய்யின் 68வது படத்தில் நடிக்கிறீங்க. நினைச்சு பார்த்தது உண்டா.. இப்படி நடக்கும் என்று..?
'உன்னை நினைத்து'படத்தில் எனக்கும் விஜய்க்கும் இயக்குனர் ஒரு பாட்டு எடுத்து விட்டார். என்ன காரணத்தினாலோ விஜய் படத்தில் இருந்து வெளியேறி விட்டார். பல முறை விஜய் படங்கள் மிஸ் ஆகிட்டே போனது. இப்போது விஜய் படத்தில் வாய்ப்பு வந்தது சந்தோஷம். விஜய் என்கிட்ட சொன்னாரு... உங்கள மட்டும் தான் படங்களில் மிஸ் பண்ணிட்டேன் என்று!

* உங்கள் குழந்தைகள் உங்க படங்களை பற்றி பேசுவார்களா?
பெரிய பையன் 11ம் வகுப்பு, சின்னவர் 9ம் வகுப்பு படிக்கிறார். யாரும் என் படங்கள் பார்க்கல, என் படங்கள் பற்றி பேசியதில்லை. கணவர் பிசினஸ் செய்கிறார். என்னை படப்பிடிப்புக்கு அனுப்பி வைத்து விட்டு, குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்கிறார். அதனால் தான் இப்போது நான் தொடர்ந்து படங்களில் நடிக்கிறேன்.

* லைலா ஆசைப்பட்டது என்ன; நடந்தது என்ன?
15 வயதில் நடிக்க வந்தேன்.சின்ன வயசுல பிராணிகளுக்கான மருத்துவராக ஆசைப் பட்டேன்; ஆனால் நடிகை ஆகி விட்டேன்.

* உங்கள் இளமை ரகசியம்?
உணவு சரியாக எடுத்துக் கொள்வேன். தினம் ஜிம் சென்று விடுவேன். நம்மை நாமே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் அழகாவோம்.

* பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புவது என்ன?
திருமணமானாலோ குழந்தைகள் பிறந்தாலோ வேலையை மட்டும் விட்டுவிடாதீர்கள். வேலை மிக முக்கியம். சிறு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்; எல்லாம் சரியான பிறகு மீண்டும் வேலையை தொடருங்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருக்கும் நடிகன் கென் கருணாஸ்நல்ல கதாபாத்திரத்துக்காக ... 'முதல் மரியாதை' : ரீமேக் செய்ய விரும்பும் கவுதம் மேனன் 'முதல் மரியாதை' : ரீமேக் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in