குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி | எனக்கான பட வாய்ப்புகள் குறையவில்லை : சோனியா அகர்வால் | நடிகை கனகலதா காலமானார் | மே 10ம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது 'ஆர்ஆர்ஆர்' | அதர்வா ஜோடியான நிமிஷா சஜயன் |
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக இருப்பவர் ஹரி. ‛ஐயா, சாமி, தாமிரபரணி, சிங்கம்' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். தற்போது விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இவரின் தந்தை கோபால கிருஷ்ணன், 88. சென்னையில் வசித்து வந்தார். சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(அக்., 21) காலை கோபால கிருஷ்ணன் காலமானார். அவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் அஞ்சலிக்காக 2 மணி வரை வைக்கப்படுகிறது. பின்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊரான கச்சனாவிளைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை(அக்., 22) இறுதி சடங்கு நடைபெறுகிறது.