Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'திருடா திருடி' - 20 ஆண்டுகள் நிறைவு

05 செப், 2023 - 12:25 IST
எழுத்தின் அளவு:
20-Years-Of-Thiruda-Thirudi

தமிழ் சினிமா உலகில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தியிலும் தடம் பதித்து தனக்கென தனி முத்திரையைப் பதித்துள்ள நடிகர் தனுஷ். அவரது அப்பா கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 2002ல் வெளிவந்த 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதற்கடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்திலும் கதாநாயகனாக வெற்றி பெற்றார்.

தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் இயக்கத்தில் நடிக்காமல், முதல் முறையாக வெளி இயக்குனரின் இயக்கத்தில் அவர் நடித்த படம் 'திருடா திருடி'. சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் வெளியான முதல் படம். 2003ல் படம் வெளியான போது யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

தனுஷின் முதல் இரண்டு படங்கள் கொஞ்சம் சீரியசான கதையம்சம் கொண்ட படமாக இருந்த நிலையில், இந்த 'திருடா திருடி' படம் ஜாலியான காதல் கதையாகவும், காமெடி படமாகவும் அமைந்து தனுஷுக்கும் கமர்ஷியல் ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

படத்தில் தினாவின் இசையில் அமைந்த பாடல்கள் அனைத்துமே அப்போது சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக 'மன்மத ராசா' பாடல் அப்போது சாட்டிலைட் டிவிக்களில் தினமும் அடிக்கடி ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி வெளிவந்த அப்படம் இன்றுடன் தனது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
100 குடும்பங்களுக்கு உதவி செய்யும் விஜய் தேவரகொண்டா100 குடும்பங்களுக்கு உதவி செய்யும் ... ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறைவு ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறைவு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in