நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தெலுங்கு திரையுலகின் நட்சத்திர நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர்களில் ஒருவர்தான் நடிகர் நாகபாபு. இவரது மகள் நிஹாரிகா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இவருக்கும் ஐதராபாத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வரும் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்தநிலையில் சில நாட்களாகவே நிஹாரிகாவும் அவரது கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர் என்கிற தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிஹாரிகாவும், சைதன்யாவும் தங்களது சோசியல் மீடியா கணக்கை ஒருவருக்கு ஒருவர் அன் பாலோ செய்துள்ளனர்.
அதேசமயம் நிஹாரிக தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா கணக்கில் அப்படியே விட்டு வைத்திருக்க, அவரது கணவரோ தாங்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையெல்லாம் வைத்து தான், தற்போது இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர் என்கிற செய்தி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.