மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் | சன்னி லியோன் நடித்த படத்தின் மூன்றாம் பாகத்தில் தமன்னா | ஜனநாயகன் இசை விழாவில் கலந்து கொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பா? | '18 மைல்ஸ் தாரணா' : ‛பேச்சுலர்' இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன் | ‛ஆந்திரா கிங் தாலுக்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | விநாயகர் சதுர்த்தி படங்கள் வருவது சந்தேகம்? | 'மெட்ராஸ் மேட்னி' குழுவினரை அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன் |
மலையாள திரையுலகில் சின்னச்சின்ன படங்கள் மூலம், அதே சமயம் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் லியோ ஜோஸ் பெள்ளிசேரி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டியை வைத்து இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற எதார்த்த கிராமத்து படம் வெளியானது. தற்போது அதற்கு முற்றிலும் நேர்மாறாக மோகன்லாலை வைத்து மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகி வரும் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்கி வருகிறார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஜெய்சல்மர் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அணுகுண்டு சோதனை மூலம் புகழ்பெற்ற பொக்ரான் பகுதியில் மிகப்பெரிய கோட்டை செட் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே பல மொழிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்ட கிட்டத்தட்ட 300 சண்டைக்கலைஞர்கள் மற்றும் மோகன்லால் ஆகியோர் பங்கேற்கும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. மல்யுத்தம் குறித்து இந்த படம் உருவாவதால் தற்போது பிரம்மாண்ட மல்யுத்த போட்டி தொடர்பான காட்சிகள் தான் படமாக்கப்பட்டு வருகின்றன என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் புலி முருகன் படத்திற்கு பிறகு மீண்டும் மோகன்லாலின் மாஸ் சண்டை காட்சிகளை இந்த படத்தில் பார்க்கலாம் என்கிறார்கள்.