யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் | ஹாலிவுட் வெப் தொடரில் தபு |
வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடிக்கும் படம் விடுதலை. இதனை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் எல்ரட் குமார் தயாரிக்கிறார், இளையராஜா இசை அமைக்கிறார். இரண்டு பாகமாக தயாராகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
விஜய்சேதுபதி, சூரி தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், நடிக்கிறார்கள்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்புகளும் முடிந்து விட்டதாக தயாரிப்பு தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.