சம்பளம் கேட்டால் மிரட்டுகிறார் : தயாரிப்பாளர் மீது நடிகை பாயல் புகார் | கல்கி 2898 ஏடி, இந்தியன் 2 - அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டங்கள் ரிலீஸ் | நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் | நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் ஏற்கெனவே படம் இயக்கி வருகிறார். அவர் வரிசையில் அடுத்து வர இருக்கிறார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் துணிச்சலான நடிகை என்று புகழ்பெற்றவர், நிர்வாணமாக கூட நடித்திருக்கிறார்.
தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தார். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி படத்தின் மூலம் அறிமுகமானார், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், சித்திரம்பேசுதடி 2 படங்களில் நடித்தார். தற்போது படம் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சினிமா இயக்க வேண்டும் என்பற்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். சந்தர்ப்ப சூழ்நிலையால் நடிகை ஆகிவிட்டேன். இந்த அனுபவத்தை சினிமா இயக்குவதற்கு பயன்படுத்திக் கொண்டேன். இதுதவிர முறைப்படி திரைக்கதை எழுதவும், படம் இயக்கவும் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி செய்து வருகிறேன்.
திரைக்கதை எழுதும் கலை பற்றி படிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதில் இன்னும் நான் முழுமையாகத் தேறவில்லை. சில ஸ்கிரிப்ட் ரைட்டர்களிடம் இதுபற்றி படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் ஒரு படத்தை எழுதி இயக்க விரும்புகிறேன். அதற்காக நடிப்பை கைவிட மாட்டேன். அதுதான் என் முதல் காதல், அடுத்த காதல்தான் படம் இயக்குவது.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.