நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

காட்பாதர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக உருவாகிவரும் படம் வால்டர் வீரையா. இயக்குனர் பாபி இயக்கி வரும் இந்த படம் வரும் ஜனவரி 13ம் தேதி சங்கராந்தி பண்டிகை ரிலீசாக வெளியாகிறது. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் கேத்தரின் தெரசா நடித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான பாஸ் வச்சிண்டு என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. இதற்காக தற்போது சிரஞ்சீவி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் பிரான்ஸ் கிளம்பி சென்றனர். தன்னுடைய குடும்பத்தையும் உடன் அழைத்துக் கொண்டு சென்றுள்ள சிரஞ்சீவி இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ளார்.