Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

போட்டிக் களத்தில் குதித்த கன்னட சினிமா

09 அக், 2022 - 11:55 IST
எழுத்தின் அளவு:
Kannada-cinema-jumped-into-the-competition

இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா என்பது மட்டும்தான் கடந்த பல ஆண்டு காலமாக இருந்து வந்தது. வெளிநாடுகளில் இந்திய சினிமா என்றால் பாலிவுட் என்று மட்டும்தான் தெரியும். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களைக் கூட 'பாலிவுட் மூவிஸ்' என்றுதான் அழைப்பார்கள். ஆனால், ரஜினிகாந்தின் 'சிவாஜி' படம் அதில் ஒரு மாற்றத்தை ஆரம்பித்து வைத்தது. அதன் பிறகு ராஜமவுலியின் 'பாகுபலி' அந்த மாற்றத்தை இன்னும் அழுத்தமாகப் பதிய வைத்தது.

இந்த வருடத்தில் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஆர்ஆர்ஆர்,' கன்னடப் படமான 'கேஜிஎப் 2', தமிழ்ப் படமான 'பொன்னியின் செல்வன்' ஆகியவை உலக அளவிலும் வசூலைக் குவித்து ஹிந்திப் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலித்தது.

'கேஜிஎப் 2' படத்தின் வெற்றி இந்திய சினிமாவை கன்னட சினிமா பக்கம் இன்னும் அதிகமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதற்கடுத்து தற்போது 'கன்டரா' படம் அதைத் தொடர்கிறது. செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த இந்தப் படம் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டுக்களுடன் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த பத்து நாட்களில் 50 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. இப்படத்தை கர்நாடகா தவிர மற்ற மாநில ரசிகர்களும் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

தென்னிந்திய சினிமாக்களில் அதிகமான வசூல் படங்களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்கள் முன்னிலை வகித்தன. தரமான படங்களில் மலையாள சினிமா முன்னிலை வகித்தது. இப்போது வசூல், தரம் என இரண்டிலும் மற்ற தென்னிந்திய சினிமாக்களுடன் போட்டி போடும் அளவிற்கு கன்னட சினிமா வளர்ந்து வருவது அவர்களுக்குப் பெருமையைக் கொடுத்து வருகிறது. மற்ற மொழி திரையுலகினருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள நடிகை  சிறைபிடிப்புமலையாள நடிகை சிறைபிடிப்பு மலையாளத்தில் பிலிம்பேர் விருது பெற்றவர்கள் விபரம் மலையாளத்தில் பிலிம்பேர் விருது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10 அக், 2022 - 04:48 Report Abuse
NicoleThomson காந்தாரா படம் சரியான மொழியாக்கம் செய்து வந்தால் அதன் தாக்கம் உங்களுக்கு புரியும் , கொஞ்சம் புரிந்த கன்னடத்திலேயே மிக அருமையான படம் அது என்று சொல்வேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in