மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷாம், குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா உள்பட ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வாரிசு படத்தில் விஜய்யின் நண்பரான நடிகர் ஸ்ரீமனும் இணைந்து இருக்கிறார். இப்படத்தில் தான் இணைந்துள்ள தகவலை பகிர்ந்துள்ள ஸ்ரீமன், இயக்குனர் வம்சி உடன் தான் எடுத்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.
அதோடு, ‛‛வாரிசு படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி. விஜய் படம் என்றால் ஒரு போதும் தவறவிட மாட்டேன். தயாரிப்பாளர் தில்ராஜூ, இயக்குனர் வம்சி மற்றும் என் ஆரூயிர் நண்பர் விஜிமாவிற்கு நன்றி. நீ தந்த ஆதரவை என்றும் மறக்கமாட்டேன். லவ் யூ விஜிமா'' என தெரிவித்துள்ளார்.