இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? | ஹிந்தியில் மட்டும் 100 கோடி வசூல் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
தமிழில் ஜெயம் படம் மூலமாக அறிமுகமாகி, அந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை சதா. அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். அதன் பிறகு படிப்படியாக வாய்ப்புகள் குறைய கடைசியாக 2018ல் வெளியான டார்ச் லைட் என்கிற படத்தில் நடித்திருந்தார் சதா. இந்த நிலையில் வனவிலங்கு ஆர்வலராக மாறியுள்ள சதா, அப்படியே ஒரு வைல்ட் லைப் போட்டோகிராபர் ஆகவும் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள குர்ஷாபர் என்கிற வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா சென்ற சதா கிட்டத்தட்ட நான்கு நாட்களும் தினசரி சபாரி செய்துள்ளார். அங்கே உள்ள பரஸ் என்கிற புலி சதாவை ரொம்பவே கவர்ந்து விட்டது. அதை பார்ப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அந்த காட்டிற்குள் பயணப்பட்ட சதாவிற்கு மூன்று நாட்கள் ஏமாற்றமே கிடைத்ததாம். நான்காவது நாள் மீண்டும் வேறு வழியாக பயணம் மேற்கொண்ட போது எதிர்பாராத விதமாக சாலையில் பரஸ் என்கிற அந்த புலி அமைதியாக அமர்ந்திருந்ததாம். அதை பார்த்த மகிழ்ச்சியில் விதவிதமாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டாராம் சதா.
ஊர் திரும்பிய பின்னரும் அந்த புலியின் ஞாபகமாகவே இருந்துள்ளார் சதா. திடீரென மீண்டும் ஒரு நாள் தனது தோழியிடம் இருந்து மீண்டும் அந்த வனவிலங்கு சரணாலயத்திற்கு சுற்றுலா கிளம்ப அழைப்பு வந்ததாம். உடனே சந்தோஷமான சதா மீண்டும் பரஸை பார்க்க அங்கே கிளம்பி செல்கிறேன் என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சதா.