இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ள விரும்பாத விஜய்சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். இந்தியில் இனிமேல் தான் அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதே சமயம் தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதுடன் விஜய்சேதுபதி நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அதேபோல மலையாளத்திலும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் நுழைந்த விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு விஎஸ் இந்து என்கிற பெண் இயக்குனரின் டைரக்ஷனில் 19 (1) ஏ என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். கடந்த வெள்ளி என்று நேரடியாக ஓடிடி தளத்திலேயே இந்த படம் வெளியானது.
இருந்தாலும் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ரொம்பவே போர், மெதுவாக நகர்கிறது என விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் இந்த இரண்டாவது படமும் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. விஜய்சேதுபதியை வைத்து தமிழில் சில பரிசோதனை முயற்சியான படங்கள் வெளியாவது போல, மலையாளத்திலும் அதே பாணியை பின்பற்றுவதால் தான் இந்த இரண்டு படங்களும் வரவேற்பை பெறவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.