3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் |
தங்கள் அபிமான ஹீரோக்களை ஆராதிக்கிறேன் என்று சில ரசிகர்கள் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம், அதற்கு பல அடி உயர மலர்மாலை என ஒரு பக்கம் அதிரடி காட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ ஏதாவது வித்தியாசமாக செய்து தங்கள் அபிமான ஹீரோக்களின் கவனத்தை ஈர்த்து அவர்களை நேரிலேயே சந்தித்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது வயலில் விதைத்த நெல் நாற்றங்காலில் ராம்சரண் உருவத்தை வரைந்து அதை வீடியோவாகவும் புகைப்படம் எடுத்துக்கொண்டு நடந்தே ஐதராபாத்துக்கு வந்து ராம்சரணை நேரிலேயே சந்தித்து சென்றார் ஒரு ரசிகர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் இளம் ரசிகையான மும்பையை சேர்ந்த டாக்டர் செர்ரி என்பவர் தனது அபிமானத்தை வெளிப்படுத்துவதற்காக விஜய் தேவரகொண்டாவின் உருவத்தை தனது முதுகில் டாட்டூவாக குத்திக்கொண்டுள்ளார். இந்த தகவல் விஜய் தேவரகொண்டாவின் கவனத்திற்கு சென்றதும் அவரை தற்போது தான் நடித்துவரும் லைகர் படத்தின் அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய் தேவரகொண்டா.
நேரில் வந்த அந்த ரசிகை விஜய் தேவரகொண்டாவை பார்த்த பிரமிப்பில் பேச்சு வராமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்துவிட்டார். பின் ஒருவழியாக சமாதானமாகி தனது முதுகில் வரைந்திருந்த டாட்டூவை அவரிடம் காட்டினார். இப்படியும் ஒரு ரசிகையா என ஆச்சரியப்பட்டுப் போன விஜய் தேவரகொண்டா கண்கலங்கியபடி நின்ற அந்த ரசிகையை மெல்ல அரவணைத்து ஆசுவாசப்படுத்தினார். இந்த நிகழ்வின்போது லைகர் படத்தின் தயாரிப்பாளர் நடிகை சார்மி மற்றும் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோரும் உடனிருந்தனர்.