ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் | என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்க நாளை வெளியாக உள்ள படம் 'விக்ரம்'.
இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகரான பகத் பாசில் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தனது படத்தில் நல்ல திறமையான நடிகர்கள் வேண்டும் என்று நினைத்து அவர்களை அழைத்து தன் படத்தில் நடிக்க வைத்தார் கமல்ஹாசன். ஆனால், அவர்களை படத்தின் எந்த ஒரு பிரமோஷனுக்கும் அழைத்துச் செல்லவில்லை என்பது கசப்பான உண்மை.
சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் மட்டும் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். பகத் பாசில் அதில் கூட கலந்து கொள்ளவில்லை. சென்னை, டில்லி, மும்பை, கொச்சி, ஹைதராபாத், மலேசியா, துபாய் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் கமல்ஹாசனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டது.
கமல்ஹாசனுடன் நடித்ததும், விக்ரம் படத்தில் இடம் பெற்றதும் தங்களது பெருமை என சொல்லிக் கொள்ளும் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் தாங்கள் படத்தின் பிரமோஷன்களில் புறக்கணிக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஒரு வேளை பத்து வருடங்கள் கழித்து அவர்கள் இது குறித்து வாயைத் திறக்கலாம்.