‛இந்தியன் 3' : மீண்டும் உருவாக ரஜினிகாந்த் தலையீடு | ஜெனிலியா எதிர்பார்க்கும் வேடம்... : மீண்டும் தமிழில் நடிக்க வருவாரா? | சினிமா டிக்கெட் கட்டணம் : கர்நாடகாவில் புதிய அறிவிப்பு | ஒரு பாடலுக்கு நடனமாடிய முன்னணி கதாநாயகிகள் : யார் நடனம் அசத்தல்? | சாணம் அள்ளிய கையில் தேசிய விருது: 'இட்லி கடை' அனுபவம் பகிர்ந்த நித்யா மேனன் | இப்ப, முருகன் சீசன் நடக்குது: இயக்குனர் வி.சேகர் | நடிகர் கார்த்தி கொடுத்த விருந்து: 'ஐ லவ் யூ' சொல்லி நெகிழ்ச்சி | சென்ட்ரல் பட விழாவில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் நினைவுகள் | தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து திருமணங்கள்: கெட்டிமேள சத்தம் கேட்கப்போகுது | மேக்கப் குறித்து சரோஜாதேவி சொன்னது: இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் புதுதகவல் |
டார்லிங், மரகத நாணயம், மொட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. சென்னையில் உள்ள இவரது வீட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த கேமரா மற்றும் அவரது ஆடைகளை அந்த இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவர் மீது சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்ததை அடுத்து திருப்பூரில் அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து அவர் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர். அதையடுத்து அந்த இளைஞர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறிய நிக்கி கல்ராணி, அவர் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று உள்ளார்.