அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து | விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா நெகிழ்ச்சி செயல்! | கணவருடன் பிறந்தநாள் கொண்டாடிய ப்ரியங்கா நல்காரி | இவ்வளவு வைரலாகும் என நினைக்கவேயில்லை : தர்ஷனா | டீச்சராக மாறி வகுப்பெடுக்கும் கேப்ரில்லா செல்லஸ் |
பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் ஹார்ட் அட்டாக் காரணமாக நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 83.
பண்டிட் பிர்ஜூ மஹாராஜின் கலை சேவையை பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதினை கடந்த 1986ல் வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ட்ரம்ஸ், தபாலா உள்ளிட்ட வாத்திய கருவியையும் வாசிக்கக் கூடியவர். தும்ரி, தாத்ரா, பஜன், கஸல் போன்ற வடிவிலான பாடல்களை மிகச் சிறந்த முறையில் நேர்த்தியாகப் பாடக்கூடியவர்.
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள கதக் பாடலான 'உன்னை காணாத' பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்றவர்.