கோமல் சர்மாவுக்கு கிடைத்த கோல்டன் விசா | கேன்ஸ் திரைப்பட விழாவை கலக்கிய இந்திய பெண்கள் | பிளாஷ்பேக்: அண்ணன், தங்கை பாசத்தின் அடையாளம் 'பாசமலர்' | 'கேம் சேஞ்சர்' பற்றி நிறைய பேச ஆசை, ஆனால் முடியாது - அஞ்சலி | சென்னையில் மற்றுமொரு 'பிரம்மாண்டத் திரை' | இயக்குனர் சூர்யபிரகாஷ் காலமானார் | 'இந்தியன்' ஜுன் 7ம் தேதி ரீ-ரிலீஸ் : இன்று புதிய டிரைலர் வெளியீடு | அனைத்தும் முடிந்தது… : மீண்டு வருமா தமிழ் சினிமா? | பிரபாஸின் புஜ்ஜியை வடிவமைத்ததில் ஆனந்த் மஹிந்த்ரா பெருமிதம் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் ராம் ரிலீஸ் ; தயாரிப்பாளர் உறுதி |
தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் ரகுமான். இவரது மனைவி மெஹர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான ரகுமான் - மெஹர் தம்பதியரின் மூத்த மகள் ருஷ்டா - அல்தாப் நவாப் ஆகியோரின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை பரிசாக முதல்வர் வழங்கினார். முதல்வரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் ரகுமான் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து நடிகர் மோகன்லால், சுசித்ரா மோகன்லால் , சரத்குமார், ராதிகா, விக்ரம், ஜாக்கி ஷெராப், இயக்குனர் மணிரத்னம், சுஹாசினி, சுந்தர் சி, பானு சந்தர், அம்பிகா, சொப்னா, மேனகா சுரேஷ், லிசி, பார்வதி ஜெயராம், ஷோபனா, பூனம் தில்லான், நதியா, சுவேதா மேனன், பாக்யராஜ், பூர்ணிமா, வினித் , காளிதாஸ், தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட திரையுலகினர் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.